#BREAKING:: மிரட்டும் "கொரோனா" பரவல்.. ஏப்ரல் 10ம் தேதி முதல்.. "ஐகோர்ட்" வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ChennaiHC announced cases conductes through video conference from April10
ஏப்ரல் 10ம் தேதி முதல் காணொளி வாயிலாகவும் விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. சமீப காலமாக நாட்களாக தினசரி கொரோனா தொற்று 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்திலும் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தினசரி கொரோனா தொற்று தற்பொழுது 250ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 273 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வழக்கு விசாரணை காணொலி காட்சி வாயிலாகவும் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் இந்த வசதியை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
ChennaiHC announced cases conductes through video conference from April10