நாடு முக்கியமா? மதம் முக்கியமா? ஓபிஎஸ்,இபிஎஸ் வழக்கு., - தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பற்றி உங்களுக்கு தெரியாத பல தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். 

நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக  பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள்,   தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தலைமை வ்ழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி வகித்த போது, 

நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, 

கோவில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா என கேள்வி எழுப்பியது, 

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, 

நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது, 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, 

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது, 

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது, 

கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என்பன போன்ற பல முக்கிய வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது பதவிப்பிரமாணம் செய்து வைக்க தலைமை நீதிபதியோ, மூத்த நீதிபதியோ இல்லாததால், தமிழக ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

தற்போது தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, கடந்த 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் ராஜஸ்தானில்  பிறந்தவர்.

ராஜஸ்தான் அரசு  வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர்,  2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.  
  
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஷ்வர்  நாத் பண்டாரி  2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC MunishwarNathBhandari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->