பெரியாரின் கைத்தடியை வாங்கியபோது என்னையே நான் மறந்தேன் - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இன்று தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது வருகிறது. இந்த நாளை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு கணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதன்பின்னர் அவர் பேசியதாவது:- "பெரியாரின் கைத்தடியை தி.க. தலைவர் கி.வீரமணி வழங்கியபோது என்னையே நான் மறந்து விட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை பெற்று இருக்கிறேன்; ஆனால் இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. போதும்..... எனக்கு இது போதும். 

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். பெரியார் நினைவிடத்திற்கு வந்ததை தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர். ஊருக்குள் வர தடை, கோவிலுக்குள் வர தடை, போராட தடை என்று அனைத்தையும் உடைத்தவர் தந்தை பெரியார். 

அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரின் மனதுக்குள் இடம்பிடித்திருப்பவர். பெரியார் பயணத்தை நாம் தொடர்வோம் என்று கருணாநிதி சொன்னார். மறைந்து 51 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரியார் பேசப்படுகிறார்.

பெரியாரிடம் கற்றறிந்த பாடத்தை தி.க. தலைவர் கி.வீரமணி வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். பெரியாரின் கருத்துகளை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். பெரியாரை உலகமயமாக்கி உலகின் சொத்தாக மாற்றி இருக்கிறோம். பெரியாரின் டிஜிட்டல் நூலகம் எல்லா வகையிலும் அனைவருக்கும் பயன்தரும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin speech about periyar memorable day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->