பலியான மாணவன்! பதறிய முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Mourning to Mayiladuthurai student Rishibalan death
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன்.
இவர் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டார்.
காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், மாணவன் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "இந்த துயரமான நேரத்தில், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Stalin Mourning to Mayiladuthurai student Rishibalan death