#Justin || டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒருநாள் பயணமாக அவரது தனிச்செயலாளர் உதயசந்திரன் மற்றும் பாதுக்காப்பு அதிகாரிகளுடன் தனிவிமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி சென்றுள்ளார்.  இந்நிலையில், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது,

குடியரசு தலைவர், துணை தலைவர் பதவியேற்பு விழாவுக்கு வர இயலாத காரணத்தினால் இன்று மரியாதை நியமிதமாக சந்தித்தேன். தமிழக ஆட்சி நிலை, அரசியல் சூழல் குறித்து பேசினோம். இருவருடனான சந்திப்பு மன நிறைவாக உள்ளத என தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் அவரிடம் செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்றுதற்கு நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், நீட் விவகாரம், மின்சார திருத்த மசோதா, காவிரி விவகாரம், மேகதாது விவகாரம்  உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் உரையாட உள்ளதாக தெரிவித்தார். ஒரு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் இரவு 8 மணி அளவில் சென்னை திரும்ப உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Press meet in Dlhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->