முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் மாணவி ஸ்ரீமதியின் அம்மா! திடீரென சந்திக்க காரணம் என்ன?
CM will meet srimathi mother on august 27
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயாரை வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 27 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டமானது, வன்முறையானது பள்ளி தீக்கிரையானது.
இதனை அடுத்து மாணவியின் உடலானது பிரேத சோதனைகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது பிரேத பரிசோதனை அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்த நிலையில், நீதி கோரி நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக ஸ்ரீமதியின் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழக அமைச்சர் சி வி கணேசனிடம் இழப்பீடாக, எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது தாயார் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் கோவை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பியவுடன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இதனையடுத்து நடைபயணம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
English Summary
CM will meet srimathi mother on august 27