உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.. பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் அறிக்கை..! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.  இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு தூக்குதண்டனை வழகங்கபட்ட நிலையில் பல சட்ட போராட்டங்களுக்கு பின் ஆயுள் தண்டனையாக குறைகப்பட்டது. இந்நிலையில்,  தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று அவருக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது . அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது .

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை . அதேநேரத்தில் , குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும் , அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் .என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Statement about perarivalan release


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->