தமிழ் புத்தாண்டு - வேட்டி சட்டையில் கலக்கும் சி.எஸ்.கே வீரர்கள்.!
csk fams wear vetti shirt for tamil happy new year
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி சட்டை அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அந்தப் புகைப்படத்தில் தோனி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் வேட்டி-சட்டையுடன் உள்ளனர். மேலும் அந்தப் பதிவில் "சவால்களை முறியடித்து ஒற்றுமையுடன் ஒன்றிணைவதற்கு புத்தாண்டு பலம் தரட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
csk fams wear vetti shirt for tamil happy new year