தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு!4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த காலையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறி வலுப்பெற்றது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று, சென்னையின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதுடன், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதுடன், இது இரவு முழுவதும் தொடர்ந்து சாரல் மழையாக மாறி வருகின்றது.

இந்த மழை காரணமாக, சென்னையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deep low pressure in the Southwest Bay of Bengal Chance of rain in 4 districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->