பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!!
Dpi order to investigate 12th students absent in public exam
நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு புதுச்சேரியைச் சேர்ந்த 7,72,200 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 21,875 தனித் தேர்வர்களும் அடக்கம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்ட 3,302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று கணினி அறிவியல், உயிரி வேதியல், அரசியல் அறிவியல், புள்ளியில் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்வில் 5,144 மாணவ மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத வராதது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மொழி பாடப் பொதுத் தேர்வில் சுமார் 13,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dpi order to investigate 12th students absent in public exam