சுகாதாரத்துறை செயலாளருக்கு கொரோனாவா?! அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!
DR Radhakrishnan IAS Tweet about his Family affected Covid19
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். வருவாய் மற்றும் பேரிடர் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை அவருடைய அனுபவம் மற்றும் வேகமான செயல்பாடு காரணமாக, கொரோனவை கட்டுப்படுத்திடுவதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
கொரோனா ஒழிப்பு பணிகளில் தீவிரமாக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் குடும்பத்திலும், கொரோனா தொற்றானது பரவிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராதாகிருஷ்ணனின் மாமனார் மற்றும் மாமியாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சோதனை எடுக்கப்பட்டதில் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா மற்றும் மகன் அரவிந்தன் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை டுவிட்டரில் பதிவு செய்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததால், அவரையும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனிடையே அவருக்கும் கொரோனா இருப்பதாக வதந்தி தீயாக பரவ, எனக்கு தொற்று இல்லை நான் நலமுடன் இருக்கிறேன் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவருடைய குடும்பத்தினர் விரைவாக குணமடைய வேண்டும் என பலரும் அவருடைய டுவிட்டுக்கு பதில் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
English Summary
DR Radhakrishnan IAS Tweet about his Family affected Covid19