மூலப்பொருட்களின் விலையேற்றத்தால்.. தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் சாத்தூரில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.

இதனால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் முழு பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று முதல் 11 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் சாத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படும் அனைத்து தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to rising prices of raw materials Match box factories closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->