95% பணிகள் முடிந்ததாக பொய் பரப்புரை! செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக!
Eps said give relief of Rs25 lakhs to the journalist muthukrishnan family
முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பொழுது ஜாபிரகான்பேட்டை அருகே உள்ள மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தார். அவர் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முத்துக்கிருஷ்ணனை நேற்று அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி ட்விட்டரில் திமுக அரசை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில் புதிய தலைமுறை பணியாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.
பருவமழை துவங்க இருக்கும் சூழலில் இன்னும் முன்னேற்பாட்டு பணிகள் கூட முழுமையாக முடியாத அவல நிலையில் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாக பொய் பரப்பரை செய்து வருவதும், மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காமல் அலட்சியத்தோடு இந்த விடியா அரசும், மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மக்களை ஏமாற்றும் விளம்பர அரசியலை விடுத்து உயிரைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு முடிவடையாத திட்டங்களால் இனி ஒரு உயிர் பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும். உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Eps said give relief of Rs25 lakhs to the journalist muthukrishnan family