பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை - ஈரோடு போலீஸ் எச்சரிக்கை.!
erode police warned for drugs sales school students
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொள்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது;-
"பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை தரக்கூடிய புகையிலைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அந்தப் போதைப்பொருள் நல்ல வாசனையுடன், இனிப்பான சுவையுடன் இருக்கும். இது காலப்போக்கில் மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரைக்கும் 11 ஆயிரத்து 271 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொள்பவர்களுக்கு ரத்தம் மூலமாக பரவக்கூடிய ஹெபாடிடிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
erode police warned for drugs sales school students