சித்திரை தேர்த்திருவிழா - ஸ்ரீ ரங்கத்தில் இன்று கொடியேற்றம்.!!
flag hoisting for chithirai chariat in sri rangam temple
திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்து காலை 4.30 மணிமுதல் 5.30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

இதையடுத்து இன்று மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
இந்த பதினோரு நாள் திவிழா நாட்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. மறுநாள், 27-ந்தேதி சப்தாவரணமும், 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
English Summary
flag hoisting for chithirai chariat in sri rangam temple