காவேரியில் வெள்ளப்பெருக்கு : 14 மாவட்ட ஆட்சியர்களிடம் முதலவர் ஸ்டாலின் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக, தமிழக எல்லையில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஓகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

குறிப்பாக ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் ஆகிய காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

மேலும், நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flooding in Cauvery Chief Stalin advice to 14 District Collectors


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->