மாநகராட்சி பயோ கியாஸ் நிறுவனத்தில் வாயுக்கசிவு..பொது மக்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு!
Gas leak at municipal biogas company The public fainted!
சென்னை மணலியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.நள்ளிரவில் திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டு, பொது மக்கள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனம் மணலி சின்ன சேக்காடு அருகே உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டது .அப்போது சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால் கரும் புகை முட்டம் ஏற்ட்டதால் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த அந்த பகுதியை சுற்றியுள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் மேலும் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம் கேட்டது.
உடனடியாக இதற்கிடையே தகவல் கிடைத்ததும் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதையடுத்து மயக்கம் அடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதனால் நள்ளிரவில் திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டு, பொது மக்கள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Gas leak at municipal biogas company The public fainted!