நடுவழியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம் - பயணிகளின் நிலை என்ன?
government bus tire run front of bus in rasipuram
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அதன் படி இந்தப் பேருந்து ராசிபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பீதியில் காத்திக் கூச்சலிட்டனர்.
ஆனால், ஓட்டுனரின் சாமார்த்தியத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பயணிகளை பத்திரமாக இறக்கி இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
government bus tire run front of bus in rasipuram