8ம் வகுப்பு மாணவனை சரிமாரியாக தாக்கிய தலைமையாசிரியர்.. போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கே.புதுக்கோட்டை  கிராமத்தை சேர்ந்தவர் குமார் . இவரது மகன் சசிகுமார். இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை தலைமையாசிரியரிடம் விளையாடுவதற்கு அனுமதி கேக்க சென்றுள்ளார். அப்பொழுது செல்போனில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் அந்த சசிகுமாரிடம் வந்த காரணம் குறித்து விசாரித்துள்ளார்.

அதற்கு சசிகுமார் கம்யூட்டர் ஆசிரியர் வராததால் விளையாட அனுமதி கேட்டுள்ளான். ஏற்கனவே செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த கோபத்தில் சசிகுமாரை பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவன் மயக்கமடைந்தான்.

அவரின் நிலையை கண்ய்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் , சசிகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து, தலைமையாசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Headmaster beaten student brutallyin Pudukottai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->