ஊர்க்காவல் படை தேர்வில் நடந்த முறைகேடு விவகாரம்..அரசுஅதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு!
Home Guard Recruitment Scam Government officials ordered to appear in person
புதுச்சேரியில் ஊர்க்காவல் படை தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு பணி நியமன கட்டுப்பாட்டு செயலர் பங்கஜ்குமார் ஜாமற்றும் அதிகாரிகள் 08.01.2025 அன்று விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் இவ்வழக்கு தொடர்பாக செப்டம்பர் மாதம் நீதி வழங்கி நான்கு மாதங்கள் கடந்தும் இது நாள் வரை நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஊர்க்காவல் படை தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதியரசர் ஆனந்த வெங்கடேசன் அவர்கள் அளித்த நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கு இன்று 18.12.2024 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் ஆனந்த வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதி அரசரிடம் அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் விசாரணையை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தார் அதனை நீதியரசர் நிராகரித்தார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக செப்டம்பர் மாதம் நீதி வழங்கி நான்கு மாதங்கள் கடந்தும் இது நாள் வரை நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பிய நீதியரசர் இதுவரை மேல்முறையீட்டு தடை உத்தரவும் இல்லாத சூழலில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மேலும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த அரசு பணி நியமன கட்டுப்பாட்டு செயலர் பங்கஜ்குமார் ஜா, கமாண்டன்ட் ஜென்ரல் அஜித்குமார் சிங், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அனிதாராய் , தலைமை நிலைய காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஸ் உள்ளிட்டவர்கள் 08.01.2025 அன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Home Guard Recruitment Scam Government officials ordered to appear in person