பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்..இஸ்ரேல் ராணுவ புதிய தளபதி உறுதி!  - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்,ராணுவதளபதியாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஇயல்சமீர்இன்றுபதவியேற்றுக்கொண்டுள்ளார்.அப்போது பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர்  ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்' என்றார்.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்  இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீண்டுள்ளது. மேலும் பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவியில் இருந்தார். இதையடுத்து  மார்ச் 5ம் தேதியுடன் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகுவதாக ஹர்சி ஹலிவி தெரிவித்தார்.இந்தநிலையில் , புதிய ராணுவ தளபதியை தேர்ந்தெடுக்க இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி, புதிய ராணுவ தளபதியாக இயல் சமீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயல் சமீர் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி இயல் சமீர், ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என்றும்  ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will rescue all the hostages. Israels new army chief confirmed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->