#Breaking: கள்ளக்குறிச்சி: அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி எப்போது திறக்கும்.? பள்ளி நிர்வாகம் அதிரடி தகவல்.!
kallakurichi school may opened in 10 days
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பள்ளி சேதமடைந்து இருக்கிறது. இதுகுறித்து CBCID போலிஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், தற்போது இன்று இந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகள் சீரமைக்கப்பட்டு வழக்கம் போல பள்ளி நடைபெறும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
kallakurichi school may opened in 10 days