என்னையும் குழந்தைகளையும் அடக்கம் செய்துவிட்டு நீ எது வேண்டுமானாலும் செய்துகொள்., ஆறு மாதம் கழித்து மனைவி செய்த செயல்.!
kallor family dead
குழந்தைகள், கணவன் இறந்த துக்கத்தில் ஆறு மாதமாக கவலையில் இருந்த மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்து உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவரின் மனைவி மீனாட்சி. இந்த தம்பதிக்கு மகன் ஜஸ்வந்த் (வயது 8 ) ஹரிப்பிரியா (6 வயது) இரு பிள்ளைகள் இருந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீனாட்சியின் தாய்வீடான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

அப்போது, யோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அங்கு உள்ள மலையில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்த லோகேஸ்வரன், பலவித செல்ஃபி போட்டோக்களை எடுத்துக்கொண்டார்.
பின்னர் சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற நேரத்தில், குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து தவறி குளத்தில் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்த போதும், இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பலியாகினர்.
குழந்தைகள் பலியான சோகம் தாளாமல் அன்றிரவே யோகேஸ்வரன் மீனாட்சி தற்கொலை செய்ய முடிவு செய்து, மறுநாள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் குளிர்பானத்தில் கலந்து லோகேஸ்வரன் குடித்தார். அப்போது மீனாட்சியும் குடிக்க முயலும்போது, அவரின் கையில் இருந்த விஷத்தை லோகேஸ்வரன் தட்டி விட்டு விட்டு, 'நம் குழந்தைகளையும், என்னையும் நல்லபடியாக அடக்கம் செய்துவிட்டு, நீ எது வேண்டுமானாலும் செய்து கொள்' என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி சத்தமிட்டவே,அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் ,குழந்தைகள் இறந்த வேதனையில் கடந்த ஆறு மாதமாக மீனாட்சி தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், நேற்று மதியம் கடம்பூரில் உள்ள தனது வீட்டில் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீனாட்சியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள் பறிபோன சோகத்தில், கணவன் அடுத்ததாக மனைவி என்று அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.