கிறித்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் பெருமை... இந்தியர்களின் சராசரி வயது 29 தான்..! - கமல்ஹாசன் பேச்சு..!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் அருகே அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லூரியின் 42 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்பொழுது பேசிய அவர் "கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். நான் இங்கு மாணவர்களுக்கு அறிவுரை கூற வரவில்லை. எனது அனுபவத்தை சொல்ல வந்துள்ளேன். நான் அதிக நேரம் பேசுவதை விட உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். 

நமது இந்திய மக்களின் சராசரி வயது 29 தான், ஆனால் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் சராசரி வயது 54 ஆக உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு களைய வேண்டும். அரசியல் மாணவர்களை வழிநடத்தக் கூடாது. மாணவர்கள் தான் அரசியலை வழிநடத்த வேண்டும். எனக்கு ஓட்டு போடுங்க என கேட்க வரவில்லை. 100% மாணவர்கள் வாக்களித்தால் அவர்களை நான் தோளில் சுமப்பேன். 

சினிமாவில் இயக்குனராகவே பணிபுரிந்து வந்த என்னை மடை மாற்றி விட்டவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் தான். எனக்கு சினிமாவுக்கு அடுத்தது அரசியல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். கிறிஸ்தவ கல்லூரியில் பேஷன் டிசைனிங் ஸ்டூடியோ ஒன்றை திறந்தேன், அதற்கு எனக்கு அருகதை இருக்கிறது. காரணம் நான் காதி உடைகளை அணிகிறேன்" என மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KamalHaasan said Proud to participate in the Christian College Festival


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->