#திருச்சூர்|| வடக்கு நாதன் கோவிலுக்கு தங்க யானையை காணிக்கையாக வழங்கிய - பக்தர்..!
Kerala temple function devotee donate gold elephant
திருச்சூர் வடக்கு நாதன் கோவில், கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு பக்தர் ஒருவர் தங்க யானையை காணிக்கையாக வழங்கினார்.
இக்கோவிலில் நடைபெறும் திருச்சூர் பூரம் விழாவில் நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள்.
இந்த விழாவிற்கு வருகை தந்த பக்தர்களில் ஒருவர், அங்கு நடைபெற்ற யானைகளின் ஊர்வலத்தை கண்டு வியப்படைந்தார்.
இதன் இடையே, அந்த பக்தர் திருச்சூர் வடக்கு நாதன் கோவிலுக்கு தங்கத்தில் யானை ஒன்றை காணிக்கையாக செலுத்த விரும்பினார்.
இதன் பிறகு, நேற்று அவர் வடக்கு நாதன் கோவிலுக்கு சென்று தங்க யானை ஒன்றை காணிக்கையாக வழங்கினார். தங்கத்தில் செய்யப்பட்டிருந்த அந்த யானை 800 கிராமில் இருந்தது.
வடக்கு நாதன் கோவில் தந்திரி புளியன்னூர் சங்கர நாராயணன் நம்பூதிரி தலைமையில், இந்த தங்க யானை கோவிலில் நிறுவப்பட்டது.
மேலும் ஒரு கோடி ரூபாய் காணிக்கையும் அந்த பக்தர் இக்கோவிலுக்கு வழங்கினார். தங்க யானையும் ஒரு கோடி ரூபாய் காணிக்கையும் வழங்கிய அந்த பக்தர் தனது பெயர் மற்றும் விபரங்களை வெளியிட மறுத்து தெரிவித்தார்.
English Summary
Kerala temple function devotee donate gold elephant