திராவிட மாடல் ஆட்சியில் அடுத்தடுத்து சாதி பிரச்சனையில் சிக்கும் அமைச்சர்கள்!
KKSSR Ramachandran Caste Arrogance
பொன்முடியையே இன்னும் மாத்தல! ஒவ்வொருத்தரா வாங்க!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த மலையடிப்பட்டி பகுதியில் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக "நரிக்குறவர்" என்ற பெயரில் இருக்கும் "குறவர்" என்ற வார்த்தையைக் நீக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மக்களின் கோரிக்கை தொடர்பாக வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் உட்பட 13 பேர் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மூலம் தங்களின் கோரிக்கையை ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல மனு அளிக்க அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அமைச்சர் வீட்டில் இல்லை என சொல்லி திருப்பி அனுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் அமைச்சரை பார்த்து விட்டு தான் செல்வோம் என சுமார் 3 மணி நேரம் அவர் வீட்டின் வாயிலில் காத்திருந்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சரை பார்க்க வந்த தென்காசி தனித் தொகுதி எம்பி தனுஷ் குமார் குறவர் மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
வீட்டிலிருந்து தூங்கி எழுந்து வந்த அமைச்சரிடம் குறவர் இன மக்கள் பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க வந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். ஓ குறவர்களா என இளக்காரமாக கேள்வி கேட்டு முதலில் செருப்பை வெளியே கழட்டி விட்டு வாருங்கள் என்ன வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
வீட்டிற்கு உள்ளே வந்த குறவர் இன மக்களின் பிரதிநிதிகளையும் தனித் தொகுதி எம்பி தனுஷ் குமாரையும் நிற்க வைத்துவிட்டு, அமைச்சர் மட்டும் ஒய்யாரமாக சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். வீடு முழுவதும் அமர சோபா இருந்தும் யாரையும் அமர சொல்லவில்லை. மேலும் குறவர் மக்களின் சார்பாக வந்த வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தும் நிற்க வைத்து பேசியுள்ளார்.
குறவர் இன பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை தொடர்பாக ஸ்டாலினை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளனர். அதற்கு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நீங்கள் நினைத்தவுடன் உங்க இஷ்டத்திற்கு எல்லாம் முதல்வரை பார்க்க முடியாது என பேசி உள்ளார். மேலும் கோரிக்கை மனுவை புரட்டிப் பார்க்கும்போது சுட்டி காட்ட வந்த குறவர் இன பிரதிநிதியை தள்ளிப் போ என தீண்டாமையை கடைப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்க சென்ற விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளனுக்கு பிளாஸ்டிக் சேர் போடப்பட்டது. அதேபோல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாதிப்பெயர் சொல்லித் திட்டினார். அதனால் திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் போக்குவரத்து துறை இலாக்கவை பிடுங்கி விட்டு பிற்படுத்தப்பட்ட நலத்துறை மாற்றினார் ஸ்டாலின்.
அமைச்சர் பொன்முடியோ ஒரு படி மேலே போய் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரை மேடையில் வைத்துக் கொண்டு அனைவரும் முன்நிலையில் நீ பறையர் தானே? பட்டிலியல் இனம் தான் அந்த அம்மா! என சில தினங்களுக்கு அமைச்சர் பொன்முடி பேசிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்பொழுது கோரிக்கை மனு அளிக்க வந்த குறவர் இன பிரதிநிதிகளையும் தனித் தொகுதி எம்பி தனுஷ் குமாரையும் அமர வைக்காமல் தீண்டாமையை கடைப்பிடித்து உள்ளார் அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன். இதே போல் சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்க வந்த பெண்ணின் தலையில் கோபமாக தட்டினார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதே பெண்மணியை வைத்து செல்லமாக தட்டியதாக பேச சொல்லி ஷூட்டிங் நடந்தது.
அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாக்கா மாற்றப்பட்டதிலிருந்து திமுகவின் அமைச்சர்கள் பொதுவெளியில் சாதியைப் பற்றி பேசுவதும், தீண்டாமையை கடைப்பிடிப்பதும் தொடர்கதை ஆகியுள்ளது.
அமைச்சர் ராஜ கண்ணப்பனை போன்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இலாக்கா மாற்றப்படுவாரா? அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா? சாதி பெயரைக் குறிப்பிடுவதும், சாதிப் பெருமை பேசுவதும், தீண்டாமையை கடைப்பிடிப்பதும் தான் திராவிட மாடலா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
KKSSR Ramachandran Caste Arrogance