கொடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் சி.பி.சி.ஐ.டி அதிரடி விசாரணை!
Kodanad case CBCID investigation Jayalalithaa car driver
நீலகிரி, கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த இடத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்து விட்டார்.
ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி முடிவு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று கோவை காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜர் ஆனார்.
அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொடநாடு பங்களா குறித்தும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். இதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 'ஏற்கனவே என்னிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடந்த உள்ளதால் தற்போது ஆஜராகி உள்ளேன்' என்றார்.
English Summary
Kodanad case CBCID investigation Jayalalithaa car driver