கிருஷ்ணகிரி காதல் திருமண கொலை விவகாரம் | பெண்ணின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்!
krushnakiri LOVE murder case shankar home attack
கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஜெகன் (வயது 28) என்பவரும், புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (வயது 21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், சரண்யாவின் கல்லூரி படிப்பு பாதிக்கும் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, கல்லூரிக்கு சென்ற சரண்யாவை அழைத்து சென்று ஜெகன் திருமணம் செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் நேற்று காலை, கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை, வழிமமறித்து படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெகனின் உறவினர்கள் இன்று காலை சரண்யாவின் வீட்டை அடித்து நொறுக்கிட்டிள்ளனர்.
சரண்யாவின் வீட்டிற்குள் நுழைந்து, டிவி, மேஜைகள் உள்ளிட்டவைகளை ஆத்திரம் தீர ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.
English Summary
krushnakiri LOVE murder case shankar home attack