ஈரோட்டில் சட்டவிரோத மது விற்பனை - படம் பிடித்த பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்! - Seithipunal
Seithipunal


மாலை முரசு டி வி ., செய்தியாளரைத் தாக்கியோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ப.ஹரிஹரன் விடுத்துள்ள அறிக்கையில், "ஈரோட்டில் ஆனை மற்றும் இளம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மதுபான கடைகளில் அரசு அனுமதிக்காத நேரத்தில் ஈட்ட விரோதமாக, மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தனர். புத்தாண்டு முதல் நாளான இன்றும் காலை நேரத்தில் சட்ட வீரோதமாக மது விற்பனை செய்துள்ளவர்

எனவே, மாலை முரசு டிவி, செய்தியாளர் கோபி தனது நிறுவன அனுமதியோடு இந்நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது தளம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மதுவானக் கடையில் (கடைஎண்: 3577), அதிக லாபத்திற்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததை தோபி பதிவு செய்துமினார். அங்கு வந்த சேகர் என்பவர், மாலை முரசு டி.வி,, நிருபர் மற்றும் தமிழக பததிரிக்கையாளர்கள் சங்க ஈரோடு மாவட்டத் தலைவர் கோபி அவர்களை சரமாரியாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

அருகில் இருந்தோர் தாக்குதலை நடுத்து நிறுத்தி, மாவட்டக் நாவல் கண்கானிப்பாளர் மற்றும் காவலதுறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாக்கியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துர் சென்றனர். படுகாயம் அடைந்த கோமி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மது விற்பனை செய்தவர்கள். வெளி ஆட்கள் மூலம் கூலி கொடுத்து பத்திரிக்கையாளரை அடித்ததாக சந்தேகம் இருக்கிறது. எனவே, செய்தி சேகரிக்கச் சென்ற செய்றியாளரை தாக்கியவரை விசாரித்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்,

அரசு விதிகளை மீறி, சட்ட விரோத செயல்களில் ஈடுபாடுவோரை அடையாளம் காட்டுவது, ஜனநாயகத்தின் நான்காம் நூன் ஆகிய பத்திரிகைகளின் கடமை, அதைச் செய்ய விடாமல், அராஜகத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், தீபத்தனையற்ற மன்னிப்பும், இழப்பீடும் வழங்க வேண்டுமெனவும் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், இச்செயலுக்கு தம் கடும் கண்டனத்தையும் பதிவு செய்கிறது." என்று அந்த அறிக்கையில் ப.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maalai murasu reporter attack


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->