மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வேண்டும்!
Madurai BusStand Name issue BJP
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வேண்டும் என்று, மதுரை மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ஜி-20 மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய தீர்மானமாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரையும், கோரி பாளையத்தின் பெயரை அழகர் பாளையம் என்று பெயர் மாற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இறுதியாக, பொதுவழியை ஆக்கிரமித்துள்ள துணை மேயரை கண்டித்தும், மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
English Summary
Madurai BusStand Name issue BJP