இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..மதுரை சித்திரை திருவிழா.! - Seithipunal
Seithipunal


மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 10:35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கினத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார். விழாவில் வருகிற 12-ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும் தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai famous chithirai festival today starts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->