மதுரை தேவர் சிலை அருகே பரபரப்பு., குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட மக்கள்.!
madurai oththakadai near people protest
இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, திருச்சியை சேர்ந்த எல்வின் என்ற தனியார் நிதி நிறுவனம் பல பேரிடம் பணம் பெற்று, சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட, பணத்தை இழந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மதுரை ஒத்தக்கடை தேவர் சிலை அருகே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுக்கவே, அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அந்த பக்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரபு நாடுகளில் உள்ள பெட்ரோல் கிணறுகளில் முதலீடு செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்று சொல்லி திருச்சி, விருதுநகர், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களை ஏமாற்றியதாக போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
English Summary
madurai oththakadai near people protest