போலி அடையாள அட்டையுடன் மோசடி - கையும் களவுமாக சிக்கிய முன்னாள் போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகே சேரமங்கலம் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சேகர். கடந்த 1993-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்த இவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பப்பட்டது. 

இதனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர பணி ஓய்வு கொடுக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு சேகர், காவல் உயரதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது, பொதுமக்களை ஏமாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

இதையடுத்து போலீசார், அதிரடியாக சேகர் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் உதவி ஆய்வாளர் சீருடையில் இருக்கும் போட்டோ, நெல்லை போலீஸ்காரர் சுரேஷ் என்ற பெயரிலான அடையாள அட்டை, சிறப்பு சேகர் என்ற பெயரிலான அடையாள அட்டை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சேகரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for fraud duplicate id card


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->