பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் - திருவண்ணாமலையில் பரபரப்பு...!!
man arrested for harassment in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே மணிகண்டன், செய்யாறு தாலுகா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2- மாணவியுடன் பழகி வந்தார். நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது.
இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் மணிகண்டன் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்துகொள்வோம் என ஆசைகாட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில், மாணவிக்கு கடந்த 1-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார். உடனே பெற்றோர் சம்பவம் குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
English Summary
man arrested for harassment in thiruvannamalai