கொந்தளிக்கும் கடல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
metereological center warning to fishermans not go to sea
வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஈடுபடுவோர் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன், தற்போது பெய்து வரும் பருவமழையினால், பாதிப்பு ஏற்பட்டால், அவசர அழைப்பு எண்ணான 117-க்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படுவதால் குறித்த கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75மிமீ வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
metereological center warning to fishermans not go to sea