மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள்..சென்னையில் 'அமுதக் கரங்கள்' திட்டம் தொடக்கம்!
MK Stalins Birthday Amudha Karangal project launched in Chennai
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் 'அமுதக் கரங்கள்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை வருகிற 1-ந்தேதி கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் 'அமுதக் கரங்கள்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த அமுதக் கரங்கள்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் 'வகையில் இந்த அமுதக் கரங்கள்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
MK Stalins Birthday Amudha Karangal project launched in Chennai