அடுத்தடுத்து விலகும் நாதக நிர்வாகிகள் - பேரதிர்ச்சியில் சீமான்.!
namakkal ntk excuetive resign from party
சமீப காலமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, உங்களது சுயநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்து விட்டீர்கள். இனி உங்களுடன் பயணிப்பது, என் தாய்த்தமிழையும், தமிழர் நல் திருநாட்டையும் இடுகாட்டில் புதைக்கும் தமிழின துரோகம்.

நாங்கள் வயதையும் பொருளாதாரத்தையும் இழந்த அதே சமயம், நீங்கள் பொருளாதாரத்தை பெருக்கி கொண்டே சுகவாசியாக மாறி வாழ்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி தானே அண்ணா அடைந்தோம். ஏன் இந்த மாற்றம்? 2000 ம் வருடங்களாக தமிழியத்தின் பண்பாட்டுப் பகை ஆரியம் என்று சொன்ன நீங்கள், 2009 இனப்படுகொலைக்கு பின் இங்கு தமிழ் தேசிய உணர்வோடு உள்ள அனைவரும் இன உரிமையை மீட்க ஒரு குடையில் அணி திரள வாருங்கள் என்று அறைகூவல் விடுத்த நீங்கள், தமிழ் பெற்ற பிள்ளைகள் தான் தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு என்று எடுத்துரைத்த நீங்கள், இன்று, அப்பிள்ளைகளை வந்தேறிகள் என தமிழனின் முதன்மை எதிரியாக கட்டமைத்து, உண்மையான பல நூற்றாண்டுப் பகைக்கு அரண் அமைத்து மடைமாற்றம் செய்வது ஏன்..?
விஜயலட்சுமி அவர்கள் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக தான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீர்களா? அப்படி இல்லையெனில் கடந்த 10 ஆண்டு ADMK ஆட்சி காலத்தில் நீங்கள் ஈழத்திற்காக செய்த நகர்வுகள் என்ன? இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்து சுக துக்கங்களில் பங்கெடுத்த எனது அன்பு நாம் தமிழர் உறவுகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனியும் எனது தமிழ் தேசியப் பயணம் உண்மையான உறவுகளுடன் தொடரும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
namakkal ntk excuetive resign from party