புதையல் ஆசை : நண்பரை நரபலி கொடுத்த நபர் கைது..!
near krishnagiri human sacrifice for treasure
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அடுத்து புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு நாகராஜ், சிவகுமார் என்ற இரண்டு மகன்களும், தனலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், லட்சுமணன் கடந்த மாதம் 28 -ந்தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி குழியில் உயிரிழந்து கிடந்துள்ளார். அந்தக் குழியின் அருகில் மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை பழம், மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களும் இருந்தது. இதை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், முருங்கமர தரிசு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரும், லட்சுமணனும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவரும், லட்சுமணனும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வேலை செய்து வந்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மகளுக்கு பேய் பிடித்திருந்ததனால், அதனை ஓட்டுவதற்காக சிரஞ்சிவி என்ற சாமியார் வந்தார். இவர் பேய் ஓட்டி முடித்ததும், அங்கிருந்த வெற்றிலை தோட்டத்தில் ஒரு இடத்தில் புதையல் ஒன்று இருப்பதாக கூறிவிட்டு சென்றார்.
இதற்கு, ராணி என்பவரை நரபலி கொடுப்பதற்காக மணி ஏற்பாடு செய்தார். ஆனால் ராணி வருவதற்கு மறுத்துவிட்டதனால், புதையலை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மணி, லட்சுமணனை நரபலி கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடத்தில் புதையல் ஏதும் கிடைக்காததால், மணி அந்த இடத்தில் இருந்தது தப்பி ஓடி சென்றுள்ளார். என்று அந்த விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வந்துள்ளனர்.
English Summary
near krishnagiri human sacrifice for treasure