தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையா? அமைச்சர் அளித்த பேட்டி!  - Seithipunal
Seithipunal


சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. 

இந்த மாறுபட்ட புதிய வகை கொரோனாவை இந்தியாவில் பரவ விடாமல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "மதுரை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், துபாயில் இருந்த வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், "பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை" என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

குறிப்பு : கொரோனவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவோம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம்!
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Year 2022 Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->