ஈரோடு இடைத்தேர்தல் - வாக்கு என்னும் மையத்தில் நாதக வேட்பாளர் வாக்குவாதம்.!
ntk candidate clash in erode vote counting
கடந்த 5-ந் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வாக்கு எண்னிக்கை நடைபெறும் மையத்தில் நாம தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, நாம் தமிழர் கட்சியின் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை என்று போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
ntk candidate clash in erode vote counting