திருச்சி விமான விவகாரம் - அதிகாரிகள் தீவிர விசாரணை..!
officers investigation trichy airport issue
திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா நோக்கி 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் மீண்டும் திருச்சிக்கே திரும்பியது.
இருப்பினும் இந்த விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், பத்திரமாக தரையிறங்கியது. இதைதொடர்ந்து, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது, விமான பைலட், விமான ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அதிகாரிகள் பைலட் மற்றும் கண்ட்ரோல் ரூம் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ பதிவை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து, டெல்லியில் உள்ள வானூர்தி இயக்கக அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்" என்று கருதப்படுகிறது.
English Summary
officers investigation trichy airport issue