பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு.! பாஸ்போர்ட்டுக்கு காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழை பெற புதிய வசதி..!
paasport office new allounce for public people
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.
இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது. தபால் நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் வரவிருக்கும் இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு உத்திரவாதம் தராது.
இந்த வசதி, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று குறித்த பிரச்சினைகளை தீர்க்க மட்டுமே உதவும் என்று சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
paasport office new allounce for public people