சென்னையில் கட்டட உரிமையாளர்களுக்கு இன்று முதல் அபராதம்...மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில், மாநகராட்சி, காவல் துறையின் தடையில்லா சான்று பெற்று, 200க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 800க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இதற்கிடையேயே அனுமதி பெறாமல், விதிகளை மீறி குடியிருப்பு கட்டடங்கள்,  அரசு மற்றும் தனியார் இடங்கள், வணிக கட்டடங்கள் என, பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விளம்பர நிறுவனத்திடம் இருந்து மாத வாடகை அடிப்படையில் பணம் வருகிறது என்பதற்காக, விளம்பர பேனர்கள் அமைக்க கட்டட உரிமையாளர்களும் அனுமதிக்கும் நிலையில், அதீத மழை, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பேனர்களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளது.

மேலும் சமீபத்தில் மும்பையில், சூறாவளி காற்றில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து, 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் விழுந்ததில், பல்வேறு அப்பாவி உயிர்கள் பறிபோனது.

இந்நிலையில் விதிமீறல் விளம்பர பதாகைகளை இன்று முதல் மாநகராட்சி பணியாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Penalty for building owners in Chennai from today Commotion caused by the corporations action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->