இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த முடியாது..அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
People cannot be divided on the basis of race or religion. Minister Sekar Babu
இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;எல்.முருகன், பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தி புரட்சியை ஏற்படுத்த நினைத்தார் என்றும் மேலும் அவரது வேல் யாத்திரைக்கு பிறகுதான் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கிக் காட்டினார் என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,அதன் பிறகு அண்ணாமலை, ஆன்மிகத்தை கையில் எடுத்து ஏதாவது ஒரு வழியில் தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என காவடி எடுத்து பார்த்தார்' என்றும் காலில் செருப்பு அணியாமல் நடந்து பார்த்தார் என்றும் ஆனால் தமிழக மக்கள், 40 தொகுதிகளும் திமுகவிற்கு என விடை அளித்தார்கள் என கூறினார்.
மேலும் `தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற திராவிட மாடல் ஆட்சி, முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது என்றும் இந்த ஆட்சி போல் எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது இல்லை என கூறினார்.
மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது என்றும் மதுரை மண்ணின் மக்கள் ஒற்றுமையோடு இருக்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
English Summary
People cannot be divided on the basis of race or religion. Minister Sekar Babu