#Breaking || பாப்ஜி மதனின் குண்டர் சட்டம் : பேச்சில் நச்சுதன்மை., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


பாப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பப்ஜி மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை, பிப்ரவரி 22ஆம் தேதிதான் விசாரணைக்கு வருகிறது என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி, அவரின்  மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், மதனின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது என்றும், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே தேவைப்படுகிறது என்றும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், 'மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியே விட வேண்டும்' என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUBG MATHAN KUNDAS CASE IN CHENNAI HC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->