சூ-வில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட ரூ.21 மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சமீபநாட்களாக வெளிநாடுகளில் இருந்து போதைபொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் போதை பொருட்களின் எண்ணிக்கையும் போதை பொருளை பயன்படுத்துவர்களின்  எண்ணிக்கையும் தொடங்கு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் கப்பல் வழியாக கடத்திவரப்பட்ட கஞ்சா சாக்லேட் போன்ற போதை பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பெண் பயணி ஒருவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அந்த பெண்ணின் கைப்பையில் மற்றும் காலணியில் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து ரூபாய் 21 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன்  போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை எடுத்து அந்த பெண்ணை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். யாருக்காக போதை பொருள் எடுத்து வந்தார்? ஏதேனும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs. 21 Crore drugs seized in Soo at the airport


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->