நிர்மலா சீதாராமன் நடிக்கிறார் - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு.!
rs barathi press meet in anna arivalayam chennai
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் நேற்று 72 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவத்தோடு உரையாற்றினார். டெல்லியில் தி.மு.க. மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி தமிழக எம்.பி.க்கள் போராடினர். தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டில் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது. யுஜிசி புதிய வரைவு விதி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.
எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டித் தந்த தமிழகத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? ஆசிரியருக்கு சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராது வஞ்சிக்கிறது மத்திய அரசு. உ.பி., பீகார், குஜராத் மாநிலங்களுக்கு கேட்காமலேயே நிதி தருகிறது மத்திய அரசு.
அளிக்க வேண்டி நிதியை கூட மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை கூட கண்டிப்பதற்கு பிரதமர் மோடி குரல் கொடுக்கவில்லை. நான் ஒரு தமிழச்சி தான் என கூறும் நிதியமைச்சர் நிர்மலா தமிழகத்திற்காக செய்தது என்ன? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார்" என்று தெரிவித்தார்.
English Summary
rs barathi press meet in anna arivalayam chennai