உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் பரப்புகிறார்... - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றசாட்டு.!  - Seithipunal
Seithipunal


சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,

உண்மைக்குப் புறமான தகவல்களை எடப்பாடி பழனிச்சாமி பரப்பி வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை எடப்பாடி பழனிச்சாமி தான் உத்தமபுத்திரர் பேசுகிறார். 

இபிஎஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. அது தொடர்பான விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

சிபிஐ விசாரணை தேவையில்லை. தி.மு.க ஒரு போதும் கேட்டதும் இல்லை. சி.பி.ஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 

சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS Bharati accusation EPS speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->