நுரை பொங்கும் திருமணிமுத்தாறு.! வேதனையில் விவசாயிகள்.!
salem thirumanimutharu river issue may
சேலம் திருமணிமுத்தாறில் நுரை பொங்க ஓடும் தண்ணீரால் விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
திருமணிமுத்தாறில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலக்கப்படுவதால், ஆற்றில் நுரை பொங்க காட்சி அளிக்கிறது.
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி சேலம் மாவட்டத்தின் ஓடும் திருமணிமுத்தாறின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கக்கூடிய சாயப்பட்டறைகள், சாயக் கழிவுகளை சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலந்து வருகின்றனர்.
இதன் காரணமாக திருமணிமுத்தாறில் நுரை பொங்க நீர் வருவதை கண்டு விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சாயக் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் தடுக்க வேண்டும் என்று, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் ஒரு மாவட்ட செய்தி : அரியலூரில் இருசக்கர வாகனத்தில் 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த வாலிபருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்று முத்தம் கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட குற்றவாளி மாரிமுத்துக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்ற நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
English Summary
salem thirumanimutharu river issue may