'சரவெடி சரண்' உடனே விடுதலை.! போலீஸே ஜாமீன் வழங்கி விடுதலை செய்து வழிஅனுப்பிவைப்பு.! காவல்நிலையத்தில் நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


சரவெடி சரண் என்று காண பாடகர் கடந்த ஆண்டு பாடிய தனது பாடலில், "பால்வாடி படிக்கும் பொழுது குச்சி மிட்டாய் கொடுத்து, எட்டாம் வகுப்பு பாஸ் ஆனதும் வாந்தி எடுக்க வைத்தால் தான் என்ன விட்டு அந்த பெண் போக மாட்டா" என்று பாடுகிறார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.வருண் குமார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்ததை தொடர்ந்து சரவெடிசரண் போலிஸாரால் தேடப்படும் குற்றவாளியானார். 

இந்த நிலையில், நேற்று இரவு சென்னை செம்பியம் பகுதியில் சரவெடி சரணை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாக சித்தரிக்கும் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் இரண்டு மணிநேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுரை வழங்கி, அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தார். மேலும், சரவெடி சரணிடம் மன்னிப்பு கடிதத்தை பெற்றுக்கொண்டு, காவல் நிலைய பிணையில் விடுதலை செய்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saravedi saran bail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->